Tamil Swiss News

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை தொடர்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்! Doris Leuthard

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை தொடர்வது குறித்து முடிவு செய்ய வேண்டும்! Doris Leuthard

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை தொடர்வது குறித்து சுவிட்சர்லாந்து முடிவு செய்ய வேண்டுமென ஜனாதிபதி Doris Leuthard தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஐரோப்பிய ஒன்றியம்- சுவிட்சர்லாந்து இடையேயான விரிசல் அதிகரித்துக் கொண்டு செல்வதால், இனியும் உறவினை தொடர்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் நாம் எந்த பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டிய தருணம் இது, இதற்கு அடிப்படை வாக்கெடுப்பு அவசியம்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவில் ஒழுங்குமுறை அவசியமாகிறது, இதன்மூலம் நாம் இப்போது கண்முன்னே சந்தித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே Swiss stock exchanges-யை அனுமதி வழங்கியுள்ளது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சுவிஸ் அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியம் பாகுபாடு காட்டுவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்தே சுவிஸ் ஜனாதிபதியும் பொது வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.