மலேசிய பணத்தை திரும்பக் கொடுப்பதற்கான சுவிஸ் அரசின் கட்டாயம்..!

பண மோசடிக்கான விசாரணையில் இருக்கும் 1 மில்லியன் டாலர் மலேசிய அரசு நிதியுடன் தொடர்புடைய CHF100 மில்லியன் தொகையை மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் சுவிட்சர்லாந்திற்கு ஏற்பட்டுள்ளது.
மலேசிய மக்களுக்கு பணத்தைத் திருப்பி அனுப்ப மூன்று அரசு சாரா நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஸ்விஸ் சார்ந்த ப்ரூனோ மன்சர் ஃபண்ட் மற்றும் இரண்டு மலேசிய நிறுவனங்கள் நிதியமைச்சர் Ueli Maurer ஐ விமர்சித்து வருகின்றன. பணத்தை திருப்பிச் செலுத்த சட்டபூர்வமான அடிப்படை எதுவும் இல்லை என்றும் அதற்கு பதிலாக சுவிஸ் கூட்டரசு நிதியம் ஒன்றில் இந்த நிதி வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
அதற்கு காரணம் இந்த நிதி ஒரு தனிப்பட்ட நிதியாக இல்லாமல், நிதியத்தின் இலாபமாக பட்டியலிடப்பட்டுள்ளது.
பணத்தை திருப்பி அனுப்புவதற்கு பாராளுமன்றத்திலும் சில ஆதரவு குரல்கள் ஒலிக்கின்றன. எம்.பி. கார்லோ சொம்மருகா, பணத்தை மலேசியாவிற்கு திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோருகிறார்.
Image: www.worldradio.ch