Tamil Swiss News

ஜூரிச் மகளிர் தின அணிவகுப்பு CHF100,000 க்கும் மேலான சேதத்தை விளைவித்துள்ளது..!

ஜூரிச் மகளிர் தின அணிவகுப்பு CHF100,000 க்கும் மேலான சேதத்தை விளைவித்துள்ளது..!

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் சிட்டி சென்டரில் நடத்தப்பட்ட அங்கீகரிக்கப்படாத அணிவகுப்பின் பங்கேற்பாளர்களால் சூறையாடப்பட்ட பொருட்களின் மதிப்பு கிட்டத்தட்ட CHF100,000 ($105,480) இருக்கும் என ஜூரிச் போலீஸ் படைகள் மதிப்பிட்டுள்ளன.

ஏறக்குறைய 1,000 பேர் பங்கேற்ற இந்த அணிவகுப்பு முன்கூட்டியே அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படவில்லை.

பொது மற்றும் தனியார் சொத்துக்கள் இரண்டிலும் கிராஃபிட்டி மூலம் தெளிக்கப்பட்ட சுவரொட்டிகள், சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் மற்றும் தூக்கி எறியப்பட்ட பெயிண்ட் பாம்கள் என இவற்றை "சொத்துக்களுக்கு பெரும் சேதம்" என பொலிசார் தெரிவித்தனர். CHF 100,000 என்பது சுத்தம் செய்வதற்கான மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு ஆரம்ப எண்ணிக்கையாகும்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்த முன்வராததற்காக சில உள்ளூர் செய்தி ஊடக அறிக்கைகளாலும் அதிகாரிகள் விமர்சிக்கப்பட்டனர்; இருப்பினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவும் குழந்தைகளாகவும் இருந்த காரணத்தினால் தான் இவர்களை கட்டுப்படுத்த முன்வரவில்லை என்று போலீஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்

எனினும், போலீஸும் நகர பாதுகாப்பு சேவைகளும் இணைந்து, அடுத்த வருடமும் இத்தகைய 'பொருக்க முடியாத நிலைமை' மீண்டும் நடைபெறாத வகையில் என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

(Image: https://www.swissinfo.ch)