Tamil Swiss News

Airbnb வாடகைகளை வருடத்திற்கு 60 நாட்களாகக் குறைக்க விரும்புகிறது ஜெனீவா

Airbnb வாடகைகளை வருடத்திற்கு 60 நாட்களாகக் குறைக்க விரும்புகிறது ஜெனீவா

வணிக ரீதியான ஆபரேட்டர்களின் Airbnb பயன்பாட்டினைக் குறைக்க விரும்புகிறது ஜெனீவா காண்ட்டன்.

60 நாள் வரம்பு ஜெனீவாவின் மாநிலக் குழுவால் அமைக்கப்பட்டதாகும். Airbnb பிளாட்பார்மில் வாடகைக்கு விடுதல் சிலருக்கு ஒரு உண்மையான வணிகமாக மாறியுள்ளது, இது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று குடியிருப்பு துறை மாநில கவுன்சிலர் அன்டோனியோ ஹோட்ஜர்ஸ், Tribune de Genève இடம் கூறினார்.

இந்த தளங்களில் சொத்துக்களை நிரந்தரமாக வாடகைக்கு விடுவதை தடுக்க காண்ட்டன் விரும்புகிறது, ஏனென்றால் கிடைக்கக்கூடிய வீடுகளின் எண்ணிக்கையை இது குறைக்கிறது. தங்குமிடங்கள் குறைந்தளவு இருக்கும்பட்சத்தில் இந்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகும்.

மானியமளிக்கப்பட்ட வீடுகள் வாடகைக்கு விடப்படுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறு வாடகைக்கு விடுவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது குத்தகைகள் நிறுத்தப்படலாம்.

கூடுதலாக, வாடகைதாரர்கள் சுற்றுலா வரியை செலுத்தவும், உரிமையாளர்கள் தங்களது வரி வருமானங்களில் வாடகை வருமானத்தை அறிவிக்கவும் சட்டம் வழிவகுக்கிறது.

ஜெனீவாவில் குறுகியகால வீட்டு உரிமையாளர்களில் 32% வணிகரீதியான ஆபரேட்டர்கள் என்று ஜூரிச் சார்ந்த mieterverband.ch இன் ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்த விகிதம் ஐரோப்பாவில் மிக உயர்ந்த விகிதங்களில் ஒன்றாக உள்ளது.

வீட்டு பகிர்வு மீது தெளிவான விதிகளை விதிக்கும் காண்ட்டனின் முடிவு மகிழ்ச்சியளிப்பதாக Airbnb ஒரு பத்திரிகை வெளியீட்டில் பதிலளித்துள்ளது. தொழில்முறை நபர்கள் மற்றும் தனிநபர்களிடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக விளக்கும் விதிமுறைகளை விதிக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

(Image: https://lenews.ch)