Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் இனி ஜி.பி.எஸ் மற்றும் ட்ரோன்களை மோசடி நபர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்!

சுவிட்சர்லாந்தில் இனி ஜி.பி.எஸ் மற்றும் ட்ரோன்களை மோசடி நபர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்!

செவ்வாயன்று ஸ்விஸ் பாராளுமன்றம், சந்தேகத்திற்கிடமான மோசடி நபர்களை கண்காணிக்க ஜி.பி.எஸ் மற்றும் ட்ரோன்களை ஒரு நீதிபதியின் கையொப்பத்துடன் பயன்படுத்த அனுமதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டது.

இந்த பாராளுமன்ற சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு அலுவலகம் உட்பட சுவிட்சர்லாந்தின் அனைத்து சமூக நல அமைப்புகளும் தனியார் துப்பறிவாளர்களை பயன்படுத்தி மோசடி நபர்கள் என அவர்கள் நம்புபவர்களை விசாரணைக்கு உட்படுத்தலாம்.

நீதிபதியின் கையொப்பத்துடன் ஜி.பி.எஸ் போன்ற கருவிகளைப் பயன்படுத்தியும் ஏஜென்சிகள் சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணிக்கலாம்.

ஒரு நீதிபதியின் கையொப்பமின்றி, பால்கனிகள் மற்றும் தோட்டங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து தெளிவாகக் காணக்கூடிய பொதுப் பகுதிகள் மற்றும் தனியார் பகுதிகள் ஆகிய இரண்டிலும் சந்தேகத்திற்குரிய நபர்களின் குரல் மற்றும் வீடியோக்களை பதிவு செய்யவும் காப்பீட்டு ஏஜென்சிகளுக்கு இந்தப் புதிய விதிகள் அனுமதிக்கின்றன.

சுவிட்சர்லாந்தின் கன்சர்வேடிவ் கட்சிகள் வாக்கெடுப்பு முடிவுகளை வரவேற்று, சமூக நல ஏஜென்சிகள் தங்களது தற்போதைய கண்காணிப்பு உபாயங்களைத் தொடர அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளன.

ஆனால் கிரீன்ஸ் மற்றும் சோசியலிஸ்ட் கட்சி (SP), இந்த புதிய விதிகள் தனியுரிமைக்கு எதிரானவை என எச்சரிக்கின்றன.

புதிய விதிகளின் மீதான ஒரு அறிக்கையில், அதிகாரிகள் மோசடிக்கு எதிராக போராடுகையில், இந்த புதிய விதிகள் தனியார் துப்பறிவாளர்களுக்கு மக்களை ஒட்டுமொத்தமாகக் கண்காணிக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது என SP தெரிவித்துள்ளது.

தங்களுடைய பங்கிற்கு கிரீன்ஸ் கட்சியினர், சந்தேகத்திற்குரிய நபர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏஜென்சிகள் எப்படி தீர்மானிக்க வேண்டும் என்பது பற்றி தெளிவான விதிகள் இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை விவாதத்தின் போது, தனியார் துப்பறிவாளர்கள் சந்தேகத்திற்கிடமான நபர்களின் குரல் மற்றும் வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே ஒரு நீதிபதி கையெழுத்திட வேண்டும் என்று கிரீன்ஸ் கட்சியினர் வாதிட்டனர்.

Image: www.thelocal.ch