நாடு கடத்திய இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிஸ் அரசு

சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடுசெலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாகஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது.

இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்தசுவிட்சர்லாந்தின் அதிகாரிகள் நிராகரித்து, அவரை நாடு கடத்தியுள்ளனர்.

நாடு கடத்தலின் பின்னர் தாம் இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டநிலையில், மீண்டும் சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்று, வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அவர் துன்புறுத்தப்பட்டமையை உறுதி செய்த நீதிமன்றம், அவருக்கு நட்டஈட்டை வழங்குமாறுஅரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி அவருக்கு அரசாங்கம் நட்டஈட்டை வழங்கி இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.