Tamil Swiss News

சுவிஸ் நகரங்களில் அதிகமான NO2 அளவுகளுக்கு டீசல் வாகனங்களே பொறுப்பு..!

சுவிஸ் நகரங்களில் அதிகமான NO2 அளவுகளுக்கு டீசல் வாகனங்களே பொறுப்பு..!

ஐந்து சுவிஸ் நகரங்களில் நைட்ரஜன் டை ஆக்சைடு (NO2) அளவுகள் தொடர்ந்து மிக அதிக அளவு இருப்பதாக அந்நகரங்களில் உள்ள காற்று மாசுபாடு அளவுகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் (TEA) படி, டீசல் வாகனங்களே அதற்கு முக்கிய காரணம் எனத் தெரிகிறது.

லோசான், பெர்ன், பாசல், ஜூரிச் மற்றும் லுகானோ ஆகிய நகரங்களில் இந்த அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனவரி மற்றும் பிப்ரவரியில், பெர்லின் நகரின் மையத்தில் ஒரு NO2 அளவுகாட்டி நிறுவப்பட்டது. பெரும்பாலான நேரம், விளக்குகள் சிவப்பு நிறத்தில் இருந்ததாக, கடந்த வியாழனன்று TEA அறிவித்திருந்தது. NO2 வின் அளவு, கன மீட்டர் ஒன்றுக்கு 30 மைக்ரோகிராம் எனும் வருடாந்திர சராசரி வரம்பை மீறுகிறது. பிற நகரங்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.

தூய்மையற்ற டீசல்

சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் இந்த NO2 மாசுபாடு, குறிப்பாக டீசல் வாகனங்களிலிருந்து வருவதாக TEA தெரிவித்துள்ளது.

இந்த மாசு அளவுகளை கட்டுப்படுத்த, அனுமதிக்கப்பட்ட வரம்பு மதிப்பிற்கு மேலாக நைட்ரஜன் டை ஆக்சைட்களின் அளவை வெளியிடும் புதிய டீசல் கார்களின் விற்பனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என TEA முடிவு செய்துள்ளது.

சாலையில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வகை கார் மாடல்களில் பெரும்பாலானவை நைட்ரஜன் டை ஆக்சைடு உமிழ்வு வரம்புகளை மீறுகிறது. இந்த மாடல்கள் அனைத்திலும் ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் செலவில் மாற்றம் செய்யப்பட வேண்டும், ஆனால் இதுவரை இது மிகவும் செயலற்றதாக இருக்கிறது, என இந்த சங்கம் தெரிவித்துள்ளது.


Image: www.swissinfo.ch