சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிகள் பதிவு அதிகரிப்பு..

சுவிட்சர்லாந்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததைவிட தற்போது 9% அதிகமான துப்பாக்கிகள் உள்ளதாக துப்பாக்கி உரிமையாளர்கள் தங்கள் ஆயுதங்களை பதிவு செய்யும் ஒரு பிளாட்பார்மில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று SonntagsBlick செய்தித்தாளில் வந்த அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்தின் intercantonal பிளாட்பார்மில் தற்போது 865,000 ஆயுதங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த வருட எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 73,000 அதிகம் என ஜூரிச் மண்டல போலீஸ் உறுதி செய்துள்ளது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் 600,000 என்ற எண்ணிக்கையில் இது இருந்ததாக மத்திய நீதி மற்றும் போலீஸ் துறை தெரிவித்ததாக இந்த செய்தித்தாளில் கூறப்பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு முதல், சுவிட்சர்லாந்து நாட்டில் குறிப்பிட்ட வகை துப்பாக்கிகளைத் தடைசெய்யும் மற்றும் பிற வகை துப்பாக்கிகளுக்கான அனுமதி தேவைகளை அறிமுகப்படுத்தும் ஒரு மத்திய சட்டம் அமலில் உள்ளது. அந்த தேசிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வரையில், ஒவ்வொரு மண்டலமும் வேறுபட்ட விதிமுறைகளைக் கொண்டிருந்தன. இன்று, அனைத்து 26 மண்டலங்களும் தங்கள் எல்லைக்குட்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை கண்காணித்து வருகிறது.
Image: www.swissinfo.ch