Valais மாகாணத்தியில் பனிச்சரிவின் போது அடித்துச் செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு.!

சுவிட்சர்லாந்தில் பனிச்சரிவின் போது அடித்துச் செல்லப்பட்ட இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தைச் சேர்ந்த கிறிஸ்ட்சர்ச்(எ) ஜொடி பரலாங் என்ற இளம்பெண், கடந்த பிப்ரவரி 24ஆம் திகதியன்று தன் கணவருடன் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
Valais மாகாணத்தின் இத்தாலி எல்லைப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் கிறிஸ்ட்சர்ச்சுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவரது கணவர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.
பின்னர் மீட்பு படையினரின் உதவியோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு கிறிஸ்ட்டுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி கிறிஸ்ட்சர்ச் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அவரின் தந்தை, ‘மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக் கூடியவள் என் மகள், 12 வருடங்களுக்கு முன் அவரது கணவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார், அவளும் அவள் சகோதரி அபியும் மிக நெருக்கமாக இருந்தார்கள், இப்போது அவர்களுக்கு தான் அதிக துக்கம்’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.