Tamil Swiss News

பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்ட பெண் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றம்..!

பயங்கரவாதி என சந்தேகிக்கப்பட்ட பெண் சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்றம்..!

பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிடுவதாக சந்தேகிக்கப்பட்ட 23 வயது பெண் ஒருவர், அவரது சொந்த நாடான கொலம்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

சுவிஸ் கூட்டாட்சி போலீஸ் அலுவலகம் (Fedpol) கடந்த திங்கட்கிழமை அப்பெண் வெளியேற்றப்பட்டதாக கடந்த புதனன்று உறுதிப்படுத்தியது. அந்தப் பெண்ணுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்கிறது, என Fedpol ஸ்விஸ் பொது தொலைக்காட்சிக்கு SRF கூறியது.

அந்த பெண்ணின் கணவர் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவராக இருப்பதாக கருதப்படுகிறது, தற்போது அவர் பிரான்சில் பிடித்துவைக்கப்பட்டுள்ளார். பத்து சந்தேக நபர்களை உள்ளடக்கிய ஒரு பிராங்கோ-சுவிஸ் சோதனையின் ஒரு பகுதியாக இந்த தம்பதியினர் நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். சுவிஸ் நகரங்களில் பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிடுவதாக அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, அவர்கள் பயணிகள் ரயில்களை கவிழ்க்கவும், இரவு விடுதிகள் மற்றும் தேவாலயங்களில் தாக்குதல்கள் நடத்தவும் திட்டம் தீட்டியிருந்தனர். அந்தப் பெண், போலீஸார் பதிவுசெய்து வைத்திருந்த உரையாடல்களை "யோசித்து வைத்த சோதனைகள்" என்று நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


(image: colombiareports.com)