Tamil Swiss News

பனிப்பாறைகளால் கடந்த மூன்று நாட்களில் மூன்று உயிர்கள் பலி!

பனிப்பாறைகளால் கடந்த மூன்று நாட்களில் மூன்று உயிர்கள் பலி!

சுவிஸ் நாட்டின் பனிமலையில் உள்ள பனிப்பாறைகளால் கடந்த மூன்று நாட்களில் மூன்று உயிர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் Valais மாகாணாத்தில் இருந்து 5 நபர்கள் கொண்ட குழு, Hofathon மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்த போது 9,330 அடி உயரத்தில் இருந்து ஒரு நபர் மீது மட்டும் பனிப்பாறை மோதியதால் கீழே தள்ளப்பட்டார்.

39-வயதான அந்த நபர் உடனடியாக அவரது கூட்டாளிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை.

மற்றொரு நிகழ்வில் மூன்று நபர்கள் கொண்ட குழுவினர் அதே வலாய்ஸ் பகுதியில் பனிப்பாறை மோதியதில் 2700 மீ தொலைவில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

அவர்களை மீட்க ஹெலிகாப்டருடன் களம் இறங்கிய மீட்பு படையினர், மூன்று நபர்களையும் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் ஒரு பெண்(29 வயது) மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் 31 வயதான பிரான்ஸ் நபர் ஒருவர், கிழக்கு சுவிஸ் பகுதியில் உள்ள Grisons பிராந்தியத்தின் Glattwang மலையை தனியாக கடக்க முயன்ற போது 2376 மீ உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

3 அடி பனியில் உறைந்திருந்த அந்த நபரின் உடல் பல மணி நேர தேடுதலுக்கு பின் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய பொலிசார், நாட்டில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.