சுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள்

Federal Council (Switzerland)
சுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. ஜனாதிபதி ஒரு வருட கால பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த சமயத்தில் அவர் 'ப்ரைமஸ் இண்டர் பாரெஸ்', அல்லது சமமானவர்களில் முதல் நபராக கருதப்படுகிறார்.
ஜனாதிபதி 2018 அலெய்ன் பெர்செட் Alain Berset
2012 ல் இருந்து அலெய்ன் பெர்செட் (SP / FR) ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அலெய்ன் பெர்செட் உள்நாட்டு விவகாரங்கள் கூட்டமைப்பின் தலைவராக (FDHA) இருக்கிறார்.
உலி மோரெர் Ueli Maurer
உலி மோரெர் (SVP / ZH) 2009 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். உலி மோரெர் 2016 ல் இருந்து நிதி கூட்டமைப்பின் (FDF) தலைவராக உள்ளார். அதற்கு முன் அவர் பாதுகாப்புத்துறை, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறை (DDPS) கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.
இக்னாஸியோ காஸ்ஸிஸ் Ignazio Cassis
இக்னாஸியோ காஸ்ஸிஸ் (FDP / TI) 2017 ல் இருந்து ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். இக்னாஸியோ காஸ்ஸிஸ் வெளியுறவுத்துறை கூட்டமைப்பின் (EDA) தலைவராக உள்ளார்.
ஜோஹன் என். ஸ்னெய்டர்-அம்மன் Johann Schneider-Ammann
ஜோஹன் என். ஸ்னெய்டர்-அம்மன் (FDP / BE) 2010 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். ஜோஹன் ஸ்னெய்டெர்-அம்மன் பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பின் (EAER, முன்னர் FDEA) தலைவராக உள்ளார்.
கய் பார்மெலின் Guy Parmelin
கய் பார்மெலின் (SVP / VD) 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். கய் பார்மெலின் பாதுகாப்புத் துறை, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு (DDPS) கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.
சைமனெட்டா சொம்மருகா Simonetta Sommaruga
சைமனெட்டா சொம்மருகா (SP / BE) 2010 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் நீதித்துறை மற்றும் போலீஸ் கூட்டமைப்பு (FDJP) தலைவராக உள்ளார்.
டோரிஸ் லியுதார்ட் Doris Leuthard
டோரிஸ் லியுதார்ட் (CVP / AG) 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். 2010 ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல்தொடர்புகளுக்கான (DETEC) கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்கள் கூட்டமைப்பின் தலைவராக (FDEA, இப்போது EAER) இருந்தார்.
(image: srf.ch)