Tamil Swiss News

Billag க்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த மக்கள்!

Billag க்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த மக்கள்!

சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்புஒன்று நடத்தப்பட்டது.

ஆச்சரியத்திற்குரிய விதமாக மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.

சுவிட்சர்லாந்து மக்கள் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்காக ஆண்டுதோறும் வீடொன்றுக்கு 451 சுவிஸ் ஃப்ராங்குகளை கட்டணமாக செலுத்துகின்றனர்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தாங்கள் பார்க்காத நிகழ்ச்சிகளுக்காக கட்டணம் செலுத்தும்படி வற்புறுத்தப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால் சுவிட்சர்லாந்தில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு கட்டணம் வசூலிப்பது தொடரவேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வதற்காக வாக்கெடுப்பு நடத்த முடிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் 71% பேர் 73 மாகாணங்களில் கேபிள் TV மற்றும் ரேடியோவுக்கு பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்தனர்.

சுவிட்சர்லாந்து ஒரு சிறிய நாடு என்றும் அதன் கலாச்சாரத்தையும் மொழி வித்தியாசங்களையும் பிரதிபலிக்கும் வகையில் செயல்படும் ஒரு ஒளி, ஒலிபரப்பும் அமைப்பு நிச்சயம் தேவை என்று பணம் கட்டுவது சரிதான் என்று வாக்களித்த பிரிவினர் கூறுகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் ஒளி, ஒலிபரப்பும் அமைப்பான SBCயின் டைரக்டர் ஜெனரல் Gilles Marchand, இந்த வாக்கெடுப்பு முடிவுகள் நேர்மறையான கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பதாகவும், இந்த முடிவை வரவேற்கும் வகையில் தாங்கள் TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தை முடிந்த அளவுக்கு குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து அரசும் 2019 முதல் இனி TV மற்றும் ரேடியோவுக்கான கட்டணத்தில் ஒரு கணிசமான தொகை குறைக்கப்படும் என்று கூறியுள்ளது.