ஐரோப்பாவின் முதல் ட்ரோன் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பை அறிமுகப்படுத்துகிறது சுவிட்சர்லாந்து

ட்ரோன்களை பயன்படுத்தி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கும் ஐரோப்பாவின் ஒரு டிஜிட்டல் உள்கட்டமைப்பான, யூ-ஸ்பேஸின் முதல் தேசியப் பணியாக சுவிஸ் அமைப்பு இருக்கும். இதன் சோதனை கட்டம் ஜூன் 2018 ல் தொடங்கும் என சுவிஸ் நியூஸ் ஏஜென்சி ATS கடந்த திங்களன்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆளில்லா விமான வாகனங்களுக்கான (UAV) தேசிய நிர்வாக அமைப்பு, ஐரோப்பிய கண்டத்திலேயே முதல் முயற்சியாக இருக்கும். சுவிட்சர்லாந்தில் வான் வழி சேவை வழங்கும் ஸ்கை கைடு நிறுவனம் மற்றும் கலிஃபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட ட்ரோன் வான்வெளி மேலாண்மை தளமான ஏர் மேப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான உடனுழைப்பாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஒரு கூட்டுப் பத்திரிகை வெளியீட்டில், இந்த இரண்டு நிறுவனங்களும், ட்ரோன் பதிவு, ஜியோஃபென்ஸ் என அழைக்கப்படும் ஜிபிஎஸ் -அடிப்படையிலான மெய்நிகர் எல்லைகள், மற்றும் UAV விமானிகளுக்கான உடனடி எச்சரிக்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய "யூ-ஸ்பேஸ்" எனும் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதில் கூறப்பட்டிருக்கும் அனைத்தும் சுவிஸ் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு சேவைகளுடன் இணைக்கப்படும்.
UAV கட்டுப்பாட்டு அமைப்பு ட்ரோன்களுடன் இணைந்து "சுவிட்சர்லாந்திற்கு பாதுகாப்பான வான்வெளியை" வழங்கும் எனவும், 2019 கோடையில் இருந்து இந்த அமைப்பு "முழூ செயல்பாட்டிற்கு" வர எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
வளர்ந்து வரும் பொருளாதாரம்
சுவிட்சர்லாந்தின் ட்ரோன் பொருளாதார வளர்ச்சிக்கு இதைப் போன்ற ஒரு திட்டம் ஒரு சிறந்த "விணையூக்கியாக" இருக்கும் என்று ஸ்கை கைடு கூறியுள்ளது. செய்தித்தாள்களின்படி, 2013 முதல் ஸ்கை கைடு நிறுவனத்தால் பெறப்பட்ட UAV விமானக் கோரிக்கைகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது.