சுவிஸ்வாசிகளிடம் இருந்து 'மறக்கப்படும் உரிமை' கோரிக்கைகளை பெற்றுள்ளது கூகுள்

சுவிஸ்வாசிகளிடம் இருந்து 14,000 க்கும் மேற்பட்ட 'மறக்கப்படும் உரிமை' கோரிக்கைகளை பெற்றுள்ளது கூகுள்
2014 முதல், தேடுபொறி முடிவுகளில் இருந்து நீக்க வேண்டி 49,700 URL கள் சம்பந்தப்பட்ட 14,607 சுவிஸ் கோரிக்கைகளை கூகுள் பெற்றுள்ளது.
மே 2014 இல் வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் ஆணையைத் தொடர்ந்து, தனிநபர்கள் தங்கள் பெயரை அடிப்படையாகக் கொண்ட தேடல்களின் முடிவுகளை நீக்க கூகுள் போன்ற தேடுபொறிகளுக்கு கோரிக்கை விடுக்கலாம். URL கள் "தகுதியற்றவை, பொருத்தமற்றவை அல்லது தொடர்பின்மை அல்லது மிகுதியானவை" மற்றும் தனிநபரின் விவரங்களை பொதுவில் வெளியிடுவது போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு தேடுபொறிகள் இணங்க வேண்டும். 2014 ஆம் ஆண்டு முதல் இது தொடர்பாக கூகுளுக்கு மொத்தம் வந்த 650,000 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில், சுவிட்சர்லாந்தில் இருந்து மட்டும் 2.2% வந்திருந்தது.
'மறக்கப்படும் உரிமை' தொடர்பாக சுவிட்சர்லாந்திலிருந்து வரும் அனைத்து கோரிக்கைகளையும் கூகுள் அங்கீகரிப்பதில்லை, இருப்பினும் 44% URL கள் நீக்கப்பட்டன. கோரிக்கைகளின் பெரும்பகுதி (88.8%) தனிநபர்களிடமிருந்து வந்தன. மீதமுள்ளவற்றில், 38.3 சதவீதத்தினர் சிறார்கள், 29.2% நிறுவனங்கள், 18.2% அரசாங்க அதிகாரிகள் மற்றும் 11.5% அரசு சாரா பொதுமக்கள்.
URL களை நீக்க வேண்டி கூகுளுக்கு வந்த மற்றும் உண்மையில் கூகுள் நீக்கிய கோரிக்கைகளில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களில் நிதித் தரவை வழங்கும் Moneyhouse.ch எனும் இணையதளம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. சமூக ஊடகங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஊடக வலைத்தளங்கள் Blick (நான்காம் இடம்) மற்றும் 20min (ஐந்தாவது இடம்) முதல் ஐந்து இடங்களை நிரப்பின.