Tamil Swiss News

பனிச்சரிவில் சிக்கிய மூன்று நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்!

பனிச்சரிவில் சிக்கிய மூன்று நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்!

சுவிட்சர்லாந்தின் பனிச்சரிவில் சிக்கிய மூன்று நபர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் St. Luc பகுதியில் உள்ள பனிச்சரிவின் வழியாக மூன்று நபர்கள் கடந்து செல்வதற்கு முயற்சி செய்துள்ளனர். 

அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் மூவறும் 2700 மீட்டர் உயர பனிச்சரிவில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளனர்.

ஒருவர் தானாக போராடி மீண்டு வந்த நிலையில், மற்ற இருவரும் பொலிசார் உதவியோடு மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர்களில் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, 29-வயதான அந்த நபருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் சிறிய காயங்களுடன் தப்பிய மற்ற இருவரும் ஹெலிகாப்டர் உதவியுடன் சியோன் மற்றும் விஸ்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களின் வயது 30 மற்றும் 29 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய கண்டோனல் பொலிசார், பனிச்சரிவு அதிகமாக உள்ளதால் அடுத்த சில தினங்களுக்கு அந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்கும்படி அறிவுறித்தியுள்ளனர்.  மேலும் அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.