Tamil Swiss News

வெளிநாட்டு ஓட்டுனர்கள் காப்பீட்டுக்கு 95% வரை அதிக தொகையை செலுத்துகின்றனர்!

வெளிநாட்டு ஓட்டுனர்கள் காப்பீட்டுக்கு 95% வரை அதிக தொகையை செலுத்துகின்றனர்!

வெளிநாட்டு ஓட்டுனர்கள் கார் காப்பீட்டுக்கு 95% வரை அதிக தொகையை செலுத்துகின்றனர்

சுவிஸ்வாசிகளை ஒப்பிடும்போது சுவிட்சர்லாந்தில் இருக்கும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் கார் காப்பீட்டு பிரீமியங்கள் பெரிய வித்தியாசத்தைக் கொண்டிருப்பதாகக் கருத்தாய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. ஒரு அல்பேனிய டிரைவருக்கு சுவிஸ்வாசியை விட 95% அதிகமான கட்டணம் விதிக்கப்படுகிறது.

சுவிஸ், இத்தாலிய மற்றும் அல்பேனிய நாட்டுக்காரர்கள் வைத்திருக்கும் பி.எம்.டபிள்யு 3-சீரீஸ் கார்களுக்கு பதினோரு பெரிய காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் காப்பீட்டு பிரீமியங்களின் விலைகளை ஒப்பிட்டு இந்த விலை ஒப்பிடும் இணையதளம் கருத்தாய்வு நடத்தியுள்ளது.

இதன்மூலம் பெரிய விலை வேறுபாடுகளைக் கண்டுள்ளது: பாலொய்ஸ் குரூப்-இன் சலுகை இத்தாலிய வாடிக்கையாளருக்கு 22% அதிகமாக இருக்கிறது. ஒரு சுவிஸ் மற்றும் ஜூரிச் நிறுவனத்தின் காப்பீட்டு சலுகை அல்பேனிய நாட்டுக்காரருக்கு ஒரு சுவிஸ் ஓட்டுனரை விட 95% அதிகமாக இருக்கிறது.

சராசரியாக, ஒரு சுவிஸ் குடிமகன் ஒரு விரிவான கார் காப்பீட்டுக்கு ஆண்டொன்றுக்கு CHF2,150 செலுத்துகிறார். ஒரு இத்தாலியர் சராசரியாக CHF2,429 ஃப்ராங்குகள் (+13%), அதே சமயம் ஒரு அல்பேனியர் CHF3,530 ஃப்ராங்குகள் (+64%) செலுத்த வேண்டும், என இந்த கருத்தாய்வு கூறுகிறது.

நாடுகள் அடிப்படையிலான விலை வேறுபாடுகள் ஆபத்து காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது என்று காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இளம் ஓட்டுனர்களின் கோரிக்கை சதவீதம் மூத்த ஓட்டுனர்களின் கோரிக்கை சதவீதத்தை விட மிக அதிகமாக இருக்கிறது, இதுவே விகிதத்தை பாதிக்கும் ஒரு காரணியாகும், என ஆக்ஸா வின்டெர்துர் தெரிவித்துள்ளது.

சுவிஸ் நகரங்களை ஒப்பிடுகையில், கார் காப்பீடு, கேனன் டிசினோவில் இருக்கும் பெல்லிஜோனா அல்லது கேன்டன் வாடில் இருக்கும் லாவ்சான்னே ஆகிய நகரங்களை விட ஜூரிச் நகரில் மலிவாக இருக்கிறது.

பொதுவாக, இந்த ஒப்பீடுகள் காப்பீட்டாளர்களுக்கு இடையில் இருக்கும் பெரிய விலை வேறுபாடுகளைக் கண்டறிந்துள்ளது. ஜூரிச் நகரில் வசிக்கும் ஒரு சுவிஸ் வாடிக்கையாளருக்கு விரிவான கார் காப்பீட்டுக்கான மிக விலையுயர்ந்த சலுகையை ஆக்ஸா வின்டர்துர் வழங்குகிறது (CHF2,691), மலிவான சலுகையை டெக்ஸ்ட்ரா (CHF1,544) வழங்குகிறது. இவற்றின் வித்தியசம் 43% என்பது குறிப்பிடத்தக்கது.