ஜெனீவா காவல்துறைக்கு சேவை செய்ய கழுகுகளுக்கு பயிற்சி!

கடந்த ஞாயிறன்று, லீ மேட்டின் டிமான்சே பத்திரிகையில் வெளியிடப்பட்ட தகவலை ஜெனீவா காவல்துறை உறுதிப்படுத்தியது. ஆனால் இந்த அணுகுமுறை வேலை செய்யும் என எந்தவொரு உத்திரவாதமும் இல்லை என்றும் எச்சரித்தனர்.
இரண்டு கழுகுகளும் இந்த ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ஜெனீவா காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சில்வெயின் கில்லியெம்-ஜென்டில் தெரிவித்தார். மேலும், கழுகு ஒரு காட்டு விலங்கு என்றும், இந்தப் பயிற்சி நீண்ட மற்றும் கடினமான ஒன்றாக இருக்கும் அதனால் முடிவுகளை கணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
சில மாதங்களுக்கு முன்னர், ஜெனீவா காவல்துறை இரண்டு கழுகு முட்டைகளைப் பெற்றது, பின்னர் அவை வெற்றிகரமாக குஞ்சு பொரிக்கப்பட்டன. ஜெனீவா காவல்துறையினருக்கு ட்ரோன்களை இடைமறிக்க கழுகுகளை ஒருங்கிணைப்பதற்கான யோசனை கடந்த வருடம் விவாதிக்கப்பட்டது.
இதே போன்ற திட்டங்கள் பிற இடங்களில் தொடங்கப்பட்டிருக்கின்றன, ஆனால் அவை உண்மையான உலக சூழல்களில் சோதிக்கப்படவில்லை. இதே நோக்கத்திற்காக பிரெஞ்சு இராணுவம் தங்கக் கழுகுகளை பயிற்சியில் ஈடுபடுத்தி வருகிறது, ஆனால் டச்சு காவல்துறையினர், பயிற்சியில் கழுகுகள் உத்தரவுகளுக்கு தொடர்ந்து கீழ்படிய மறுத்ததால் சமீபத்தில் தங்களது 'ட்ரோன்களுக்கு எதிரான கழுகு' திட்டத்தை நிராகரித்தனர்.
போலீஸ் படையில் ட்ரான்கள்
UAV க்களைப் பயன்படுத்துவது என சமீபத்தில் கண்டோனல் போலீஸ் கமாண்டர்ஸ் (CCPCS) மாநாட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக வேலை குழுவினால் பரிந்துரைக்கப்பட்டது. எதிர்காலத்தில், ட்ரோன்கள் "வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் போல" பயன்படுத்த முடியும் என 'சொன்டாக்ஸ் ஜெய்டுங்' பத்திரிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். விபத்துகளை கண்காணிக்க அல்லது சுவிட்சர்லாந்தில் காணாமல்போன நபர்களை தேடுவதற்காக பத்து பொலிஸ் குழுக்கள் கோப்டர் கிராஃப்ட்களை பயன்படுத்துகின்றனர். எதிர்காலத்தில் இந்த வகை உபகரணங்களை வாங்குவதற்கான சாத்தியக்கூறுகளை மற்ற கண்டோன்கள் மதிப்பீடு செய்துவருகின்றன.