Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் ஊழல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் ஊழல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் ஊழல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மொத்தம் 122 எச்சரிக்கைகள் 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசு அதிகாரிகளால் பெறப்பட்டுள்ளன, இது முந்தைய ஆண்டை விட 44 அதிகமாகும். ஒழுங்குமுறை மற்றும் ஊழலைப் பற்றி தெரிவிக்க ஒரு ஆன்லைன் இணையதளத்தை அறிமுகப்படுத்தியதே இந்த அதிகரிப்புக்குக் காரணமாகும்.

இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 43% குற்றச்சாட்டுகளும் மற்றும் மீதமுள்ள 57% குற்றச்சாட்டுகள் பிற வெளியாட்களுக்கு எதிராகவும் பதிவுசெய்யப்பட்டு இருப்பதாக, கடந்த சனிக்கிழமையன்று மத்திய தணிக்கை அலுவலகம் அறிவித்தது. இது வாராந்திர வெளியீடுகளான 'சுவிஸ் ஆம் வோகெனெண்டே' மற்றும் 'சுடோஸ்ட்ஸ்வெய்ஸ் ஆம் வோகெனெண்டே' ஆகியவற்றில் வெளிவந்த கட்டுரைகளை உறுதி செய்தன.

ஆவணங்களின் படி, பெரும்பான்மையான எச்சரிக்கைகள், ஊழல், நிர்வாக சீர்கேடு அல்லது பொது ஒப்பந்தங்களை வழங்குவது, அல்லது தேசிய சொத்துக்களை ஆபத்திற்கு உட்படுத்துவது போன்றவற்றை உள்ளடக்கியே இருந்தது.

ஜூன் 2017 வரை, தகவல் தெரிவிப்பவர்கள் - மத்திய அரசு ஊழியர்கள் அல்லது தனிநபர்கள் - விசேஷமான இணையதளம் மூலம் அநாமதேயமாக, பாதுகாப்பாக, ஆதாரங்கள் சமர்பிக்காமல் சந்தேகத்திற்குரிய முறைகேடுகளை பதிவு செய்யலாம். இதில் ஒரே ஒரு நிபந்தனை என்னவெனில், முதலாளியின் நம்பகத்தன்மையையும் கடமையையும் மீறாமல் இருப்பது ஆகும். உதாரணத்திற்கு நேரடியாக பத்திரிக்கையை தொடர்பு கொள்வது போன்றவை.


சுவிட்சர்லாந்தில் ஊழல் பற்றி தகவல் தெரிவிக்கும் இணையம் :- www.whistleblowing.admin.ch