Tamil Swiss News

இரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கண்ட இடங்களில் தொட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட நபர்

இரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: கண்ட இடங்களில் தொட்டு அட்டூழியத்தில் ஈடுபட்ட நபர்
கேட்டாலானியாவில் இரயிலில் பெண் பயணித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்த சிலர் அப்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்துள்ளனர். கேட்டாலானியாவில் பயணிகள் இரயிலில் பெண் ஒருவர் பயணித்துக் கொண்டிருக்கிறார், அப்போது அவர் அடுத்த ஸ்டேஷசனில் இறங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த போது, வயது முதியவர் அப்பெண்ணிடம் முதலில் ஸ்பெயின் மொழியில் பேசுகிறார். அப்போது நீ இறங்குவதற்கு முன்னர் உன் ஆடைகளை களைத்து எங்களிடம் காட்டிவிட்டு செல் என்று கூறுகிறார். அவருடன் இருந்த சிலரும் ஆமாம் என்று கூறுகின்றனர். ஆனால் அப்பெண்ணோ இல்லை, இல்லை முடியாது என்று கூறி மறுக்கவே, உடனடியாக அருகில் வந்த ஒரு நபர் அப்பெண்ணை கண்ட இடங்களில் தொட்டு முத்தம் கொடுக்கிறார். இதில் அப்பெண் வேறு வழியின்றி இவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமே என்று, அடுத்த ஸ்டேஷன் வந்தவுடன் உடனடியாக கீழே இறங்கி செல்கிறார். இது தொடர்பான வீடியோவை இரயிலில் இருந்த நபர் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். குறித்த வீடியோவைப் பார்த்த சிலர் பெண் என்றால் ஒரு போதை போன்று தான் அனைவருக்கும் தெரிகிறது, இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்....