சுவிஸ் சாக்லேட் தயாரிப்பாளர்களுக்கு இனிப்பான செய்தியைத் தந்துள்ளது சாக்லேட் ஏற்றுமதி

சாக்லேட் ஏற்றுமதியால் பெறப்பட்ட விற்றுமுதல் சுவிஸ் சாக்லேட் தயாரிப்பாளர்களுக்கு இனிப்பான செய்தியைத் தந்துள்ளது
உள்நாட்டு நுகர்வு குறைந்திருந்தாலும், வெளிநாட்டு தேவைகளின் காரணமாக சுவிஸ் சாக்லேட் விற்பனை 2017 ல் 3.1% அதிகரித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, சுவிஸ் சாக்லேட் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் 2017 ஆம் ஆண்டின் (சாக்கோசூயிஸி) மொத்த வருமானம் CHF1.85 பில்லியன் ($ 1.98 பில்லியன்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்க்கப்பட்ட சாக்லேட்களின் அளவு 2.7% அதிகரித்தது 190,731 டன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இருப்பினும், உள்நாட்டு விற்பனை 1.3% சரிந்ததுள்ளது. 2017 ல் சுவிஸ்வாசிகள் தலா 10.5 கிலோ சாக்லேட் "மட்டுமே" பயன்படுத்தினர்; இது முந்தைய ஆண்டை விட அரை கிலோ குறைவு.
உள்நாட்டு நுகர்வின் வீழ்ச்சியை அதிகப்படியான ஏற்றுமதி ஈடு செய்துள்ளது. வெளிநாடு விற்பனை 4.8% அதிகரித்து 127,923 டன்களாக இருந்தது. மொத்த ஏற்றுமதியின் விற்றுமுதல் 6.9% அதிகரித்து CHF936 மில்லியனாக இருந்தது.
மூன்று வருட வீழ்ச்சிக்குப் பின், 2017 ஆம் ஆண்டில் ஜெர்மன் சந்தை மேலோங்கி, விற்பனை 16% ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா தவிர (-7%), மற்ற ஐந்து முக்கிய நுகர்வு நாடுகளிலும் விற்பனை அதிகரித்துள்ளது: இங்கிலாந்து 2%, பிரான்ஸ் 8% மற்றும் கனடா 6%. முதல் 20 இடங்களில் ஆஸ்திரேலியாவும் ரஷ்யாவும் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளன.
2017 ஆம் ஆண்டில், சாக்கோசூயிஸி தனது வெளிவட்டார உறுப்பினர்களுக்கு இடையே 18 சாக்லேட் உற்பத்தியாளர்களை கண்டறிந்துள்ளது. சாக்கோசூயிஸி மொத்தம் 4,608 பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
(image: northforker.com)