Tamil Swiss News

சுவிட்சர்லாந்தில் அடுத்த வாரம் துருவ குளிர்க் காற்று சுழன்றுவீசும்!

சுவிட்சர்லாந்தில் அடுத்த வாரம் துருவ குளிர்க் காற்று சுழன்றுவீசும்!

ஆர்க்டிக் வானிலை அமைப்பு பிப்ரவரி 2012 க்குப் பின் சுவிட்சர்லாந்தின் மிகக் குளிர்ந்த குளிர்கால நிலையை ஏற்படுத்த இருக்கிறது என மீட்டியோ நியூஸ்-இன் (MeteoNews) வானிலை அறிக்கை  கூறுகிறது.

பிரான்ஸ், ஸ்காண்டிநேவியா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் இந்தக் குளிரை உணரக்கூடும்.

ஆர்க்டிக் ஸ்ட்ராட்டோஸ்பியரில் அதிகரித்து வரும் காற்றின் வெப்பம், சாதாரண வானிலை ஓட்டத்தை சீர்குலைத்துள்ளது. ஐரோப்பாவில் காற்று பொதுவாக அட்லாண்டிக் பகுதியிலிருந்து மேற்கு-கிழக்காக வீசும். எனினும், உயர்நிலையில் வெப்பமாகும் இந்தக் காற்று, வானிலை ஓட்டத்தை மாற்றி, சைபீரியாவிலிருந்து அட்லாண்டிக் நோக்கி வீசும் காற்றாக உருவாகுகிறது என மீட்டியோ நியூஸ் கூறுகிறது.

சுவிஸ் மீட்டியோ, இந்த ஆர்க்டிக் வானிலை நிகழ்வை ஒரு திடீர் எதிர்பாரா ஸ்ட்ரேடோஸ்பெரிக் வெப்பமயமாக்கல் என்று விவரிக்கிறது.

தற்போதைய குளிர் இந்த வார இறுதியில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஞாயிறன்று அதிக சக்தியுடன் திரும்பி வந்து, நாளடைவில் வெப்பநிலையை படிப்படியாகக் குறைக்கும். சுவிஸ் பீடபூமியில் -3 மற்றும் -6 இடையேயான வெப்பநிலை எதிர்பார்க்கப்படுகிறது, குறைந்த வெப்பநிலை 1,000 மீட்டரில் -10 டிகிரியாகவும், 2,000 மீட்டரில் -20 முதல் -25 டிகிரியாகவும் இருக்கக் கூடும்.

பிரபலமான பைஸ் காற்றும் இந்த நேரத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீடபூமியின் சில பகுதிகளில் வெப்பநிலை -10 முதல் -15 வரை உணரப்படும், மேலும் இந்தக் காற்று தன் தனிச்சிறப்புமிக்க பனி சிற்பங்களையும் வழங்கும்.

தங்களது மாடல்களின் நிச்சயமற்ற தன்மை காரணமாக எதையும் முன்கூட்டியே துல்லியமாகக் கணிக்கக் கடினமாக இருப்பதாக ஸ்விஸ் மீட்டியோ கூறினாலும் குறிப்பிடத்தக்க அளவிலான பனிப்பொழிவிற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.


(image: lenews.ch)