Tamil Swiss News

ஸ்ஹேன்ஜென் மற்றும் டப்ளின் ஒப்பந்தங்களில் சுவிஸ் நாட்டின் பங்கும் விளைவுகளும்

ஸ்ஹேன்ஜென் மற்றும் டப்ளின் ஒப்பந்தங்களில் சுவிஸ் நாட்டின் பங்கும் விளைவுகளும்

ஸ்ஹேன்ஜென் மற்றும் டப்ளின் ஒப்பந்தங்களில் சுவிஸ் நாட்டின் பங்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக புகலிட விஷயத்தில் புதிய அரசாங்க ஆணைக்குழு அறிக்கை ஒன்றைக் கண்டுள்ளது.

உடன்படிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அதிக விலை கொடுக்கவேண்டியது வரும் என வியாழக்கிழமை அன்று மத்திய வெளியுறவுத்துறை (FDFA) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ஹேன்ஜென் / டப்ளின் ஒழுங்குமுறை அமைப்பில் இருப்பதனால் சுவிட்சர்லாந்துக்கு ஏற்படும் பொருளாதார தாக்கத்தை மதிப்பீடு செய்ய எகோப்ளான் (Ecoplan) ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஆணையிடப்பட்டது.

பிரதான விளைவுகள் எல்லை கட்டுப்பாடு மற்றும் விசா விதிகளில் காணப்படுகின்றன, இந்த இரு விஷயங்களையே ஸ்ஹேன்ஜென் மற்றும் டப்ளின் ஒப்பந்தம் முக்கியமாக மேற்பார்வையிடுகிறது.

"சுவிட்சர்லாந்து, ஸ்ஹேன்ஜென் / டப்ளின் ஒப்பந்தத்தில் இருந்து விலகினால், அண்டை நாடுகள் சுவிட்சர்லாந்துடன் புதிய வெளிப்புற ஸ்ஹேன்ஜென் எல்லையில் திட்டமிடப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இது எல்லை தாண்டி வரும் சமயத்தில் குறிப்பிடத்தக்க காத்திருப்பு நேரங்கள் மற்றும் நெரிசல் ஏற்பட வழிவகுக்கும்" என்று FDFA ஒரு அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்திற்கு பயணிக்க கூடுதல் விசா தேவைப்படும் சுற்றுலா பயணிகளுக்கு கூட இதனால் பிரச்சனை ஏற்படலாம். இதனால் புகழ்பெற்ற ஒரு வணிக நாடாக மற்றும் சுற்றுலாத்தளமாக விளங்கும் சுவிட்சர்லாந்தின் புகழ் குறையும்.  ஸ்ஹேன்ஜென் / டப்ளின் ஒப்பந்தம் இல்லை எனில், சுவிஸ் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுவாக்கில் CHF 4.7 பில்லியனில் ($ 5 பில்லியன்) இருந்து CHF 10.7 பில்லியன் (11 பில்லியன் டாலர்) வரை வருமானத்தை இழக்கும் என்று எகோப்ளான் மதிப்பிட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மொத்த உள்நாட்டு உற்பத்தி 1.6 முதல் 3.7% வரை சரியும்.

2012 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலத்தை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சமயத்தில்,  ஸ்ஹேன்ஜென் ஒப்பந்தத்தில் பங்கேற்றிருந்த போது சுவிட்சர்லாந்துக்கு ஒவ்வொரு வருடமும் சராசரியாக CHF 53 மில்லியன் செலவு ஏற்பட்டது.

இருப்பினும், டப்ளின் உடன்படிக்கையின் புகலிட கூட்டுறவு கட்டுப்பாடுகள் ஸ்ஹேன்ஜெனுடன் தொடர்புடைய செலவினங்களை விட அதிகமான சேமிப்பை வழங்குகின்றன. ஏனெனில், சுவிட்சர்லாந்து, தான் ஏற்றுக்கொள்வதை விட அதிகமான மக்களை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடமாற்றுகிறது. மேலும் இதனால் ஒரு வருடத்திற்கு சராசரியாக CHF 270 மில்லியனை சேமிக்கிறது என இந்த அறிக்கை கூறுகிறது.


(image: admin.ch)