சுவிட்சர்லாந்தில் இலங்கையர்கள் போலி மரண அச்சுறுத்தல்கள் காட்டி அரசியல் பாதுகாப்பு - சிங்கள ஊடகம்

இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு சென்ற 146 இலங்கையர்கள் அந்நாட்டில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த 146 இலங்கையர்களும் இந்த வருடத்தில் சுவிட்சர்லாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வித உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத நிலையில் சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையர்கள் போலி மரண அச்சுறுத்தல்கள் காட்டி அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வருடத்தில் 8315 வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் பாதுகாப்பு கோரியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.