Tamil Swiss News

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணை

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு வார இடைவெளிக்குப்பின் Bellinzonaவிலுள்ள Federal Criminal நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையின் இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில், அரச சட்டத்தரணியின் முடிவுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு காத்திருக்கிறது.

திங்கட்கிழமை காலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகளும், அரச தரப்பு சட்டத்தரணிகளும் சமீபத்திய ஆதாரம் குறித்து விவாதித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பின் சட்டத்தரணிகள், எட்டு ஆண்டுகளுக்குமுன் இந்த வழக்கு தொடங்கியதிலிருந்தே வழக்குடன் தொடர்புடையவர்களான Vaudஐச் சேர்ந்த இரண்டு பொலிஸாரை விசாரிக்க அனுமதி கோரினர்.


தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்த அரச சட்டத்தரணி.

அந்த காலகட்டத்தில் சுவிட்சர்லாந்தில் இயங்கிக் கொண்டிருந்த World Tamil Coordinating Committee (WTCC) என்னும் தமிழ் அமைப்பின் காசாளர் சார்பாக வழக்காடிய சட்டத்தரணிகள், குறிப்பாக அரச சட்டத்தரணி அலுவலகம் மற்றும் WTCC அலுவலகங்களுக்கிடையே தொடங்கப்பட்டிருக்கவேண்டிய தொலைபேசித் தொடர்புகள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

மேலும் இலங்கையின் சிவில் யுத்தம் குறித்து நன்கறிந்த இன்னொரு வரலாற்று நிபுணர் மற்றும் இதர சாட்சிகளையும் நேர்காணல் செய்யவும் கோரிக்கை விடுத்தார்.

அரச சட்டத்தரணி, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகள் சமர்ப்பித்த கோரிக்கைகளை எதிர்த்து கடுமையாக வாதிட்டார்.

அவர் WTCCயானது விசாரணை தொடங்கிய பத்து நாட்களுக்குப்பின் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டதை சுட்டிக்காட்டினார். இது கணிப்புகளை அர்த்தமற்றதாக்கும் என்றார் அவர். தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.


போருக்கு நிதியுதவி

ஜனவரியிலிருந்து சுவிட்சர்லாந்தில் வாழும் 12 தமிழர்கள் மற்றும் ஒரு ஜேர்மானியர் என மொத்தம் குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளார்கள்.

அவர்கள்மீது ஒரு குற்றவியல் அமைப்புக்கு உதவுதல், மோசடி, போலியான ஆவணங்களை உருவாக்குதல், சட்ட விரோதப் பணப்பரிமாற்றம், பணம் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்கள்மீது விடுதலைபுலிகளின் போருக்கு நிதி உதவி செய்யும் ஒரு பெரும் அமைப்பை சுவிட்சர்லாந்தில் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர்தலுக்கான ஃபெடரல் அலுவலகமும், 2002 மற்றும் 2006க்கு இடையேயான காலகட்டத்தில் WTCCயின் கல்வித்துறையின் பல்வேறு பாடத்திட்டப் பிரிவுகளுக்கு 100,000 பிராங்குகள் வழங்கியதாக செய்திகள் வெளியாகின.

இந்த வழக்கு விசாரணை சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கிரிமினல் விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


(image: swissinfo.ch)