சுவிஸ் நாட்டில் பல் சிகிச்சை பற்றிய தகவல்கள்

சுவிஸ் நாட்டில் பல் சிகிச்சைக்கு நோயாளி தானே அதற்குறிய கட்டணத்தை செலுத்துதல் வேண்டும்.
பற்களில், முரசுகளில், தாடையில் புண்கள் ஏற்பட்டால், இவை நோய் அல்லது விபத்து காரணமாக இருந்தால் மட்டுமே சுகாதார காப்புறுதி இவை சம்மந்தபட்ட சிகிச்சைகளுக்குரிய கட்டணத்தை வழங்கி உதவும்.
சுகாதார காப்புறுதி பின் கடவாய் பற்களைப்பிரித்தெடுப்பதற்குக்கூட கட்டணம் செலுத்தியதில்லை.
சுகாதார காப்புறுதி உங்களுக்கு புதிய பூர்த்தி செய்யும் காப்புறுதி ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்கலாம். இந்த பூர்த்தி செய்யும் காப்புறுதி சில பல் சிகிச்சைக்கான கட்டணத்தின் ஒரு பகுதியினை உங்களுக்கு வழங்குகிறது. இந்த பூர்த்தி செய்யும் காப்புறுதிகள் மிகவும் விலை உயர்ந்தவை. இதனை காரணமாக வைத்து சுவிஸில் கிழக்கு ஐரோப்பாவை நோக்கி பல் சுற்றுலா பயணிகள் என்ற ஒன்று உருவாகி உள்ளது.
உங்கள் கவனத்திற்கு!
தற்காலிகமான வதிவிட அனுமதி பெற்றவர்களும், தஞ்சம் கோரி வந்தவர்களும் பல் சிகிச்சைகளால் எர்ப்படும் செலவுகளுக்கு தற்காப்பு உள்ளது என்று எழுதப்பட்ட உத்தரவாதம் ஒன்றை சமர்பித்தால் மட்டுமே இவர்களுக்கு பல் சிகிச்சை வழங்கப்படும். இதை நீங்கள் தகுதி வாய்ந்த நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம். அவசர தேவை ஏற்படும் வேளைகளில் பல் மருத்துவர் வலியை குறைப்பதற்கான வழிமுறைகளை எழுதபட்ட தற்காப்பு உத்தரவாதம் இன்றி கையாளலாம்.
(image: nammacoimbatore.in)