சுவிட்சர்லாந்தில் ஊதியமற்ற பணியில் ஈடுபடும் பெண்கள்!

சுவிஸ் நாட்டில் பெண்கள் 9.6 பில்லியன் மணி நேரம் ஊதியமில்லா பணிகள் செய்துள்ளதாக 2016-ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்புடைய நபர்களுக்கு ஈடுசெய்யப்பட்டால் CHF408 பில்லியன் அளவுக்கு செலவாகும் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் இது CHF401 பில்லியன் அளவுக்கு இருந்தன.
தூய்மைப் பணியில் ஈடுபடுதல், தன்னார்வப் பணிகள், குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட ஊதியமில்லாத பணிகளில் ஈடுபடும் 15 வயதுக்கும் மேம்பட்ட மக்களில் 61.3 சதவிகிதம் பெண்கள் தான் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், சுவிஸ் மக்கள் 2016-ஆம் ஆண்டில் மட்டும் 9.2 பில்லியன் மணிநேரங்களை இதுபோன்ற ஊதியமில்லா வேலைகளில் செலவழித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
குறிப்பாக இதுபோன்ற வேலைகளில் பெண்களே அதிகளவு ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
குழந்தை பராமரிப்பில் வாரம் ஒன்றுக்கு சராசரியாக 69.6 மணி நேரம் தாய்மார்களும், 68.8 மணி நேரம் ஆண்களும் செலவழித்து வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் 2010-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில் வாரத்திற்கு சராசரியாக பெண்கள் வேலை நேரத்தை 1 மணி நேரம் அதிகரித்துள்ளதும், ஆண்கள் 1.7 மணிநேரமாக அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி கடந்த ஆண்டு மட்டும் சுவிஸ் ஆண்கள் 61.6 சதவிகிதம் ஊதியம் பெறும் பணிகளை செய்துள்ளனர். இது ஒட்டுமொத்தமாக 7.9 பில்லியன் மணி நேரம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.