Aargau இல் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூவர்: பொலிசார் விசாரணை

சுவிட்சர்லாந்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூவரின் குறித்த விசாரணையை பொலிசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வயதான தம்பதியர் மற்றும் நான்கு வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் 77 மற்றும் 55 வயதான நிலையில், தற்கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
ஒருவர் மற்ற இருவரை சுட்டுக் கொன்ற பின் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
குறித்த குடியிருப்பில் இருந்து தீயணைப்பு அலாரம் வந்ததை தொடர்ந்தே அக்கம்பக்கத்தினர் பொலிஸை அழைத்ததாக தெரிகிறது.
பொலிஸ் வந்த போது, வீடு உள்பக்கம் பூட்டியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.