Tamil Swiss News

250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாயலம் குறித்து நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

250 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவாயலம் குறித்து நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

சுவிஸில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் இரவு முழுவதும் மணி அடிக்கலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


நாட்டின் ஜூரிச் நகரின் அருகில் இருக்கும் வேடன்ஸ்வில் பகுதியில் அமைந்துள்ளது புராட்டஸ்டன்ட் தேவாலயம்.


250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த தேவாலயத்தில் இரவு பத்து மணியிலிருந்து காலை 7 மணி வரை 15 நிமிடத்துக்கு ஒரு முறை மணி அடிக்கும் வழக்கம் இருந்து வந்தது.


இந்நிலையில் இப்படி இரவு முழுவதும் தேவாலய மணி ஒலிப்பதற்கு தடை விதிக்க கோரி, தேவாலயத்தின் அருகில் வசிக்கும் ஒரு தம்பதி கடந்த 2015-ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அவர்களுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.


இதையடுத்து கிறிஸ்துமஸ் நெருங்கும் வேளையில் இரவு முழுவதும் தேவாலயத்தில் மணி அடித்து கொள்ளலாம் என நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.


இரவு நேரங்களில் மணி அடிப்பதன் எண்ணிக்கையை குறைப்பது வாழ்க்கை தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


இதற்கு தேவாலயத்தின் சபை உறுப்பினர் பீட்டர் மியர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


தேவாலய மணி, மக்கள் உணர்வின் முக்கிய பகுதியாகும், நீண்ட காலமாக அவர்கள் வாழ்வின் அங்கமாக உள்ளது என பீட்டர் கூறியுள்ளார்.


இது குறித்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 79% பேர் தேவாலய மணி தங்களுக்கு தொந்தரவாக இல்லை என கூறியதாகவும் பீட்டர் தெரிவித்துள்ளார்.

https://www.nytimes.com/reuters/2017/12/13/world/europe/13reuters-swiss-bells.html

http://www.bbc.com/news/world-europe-42347033