Tamil Swiss News

கைக்கடிகார விற்பனையில் சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்தியது ஆப்பிள்!

கைக்கடிகார விற்பனையில் சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்தியது ஆப்பிள்!

கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் தனது கைக்கடிகார விற்பனையில் சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்தியுள்ளது.

கைக்கடிகாரங்களிலேயே சுவிஸ் கைக்கடிகாரங்கள்தான் புகழ்பெற்றவை என்றிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரங்கள் சுவிஸ் கைக்கடிகாரங்களைவிட 2 மில்லியன் அதிகம் விற்பனையாகியுள்ளன.

Canalys என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வொன்றில், கடந்த ஆண்டு விழாக்கால விற்பனையில் அதிக மக்கள் சுவிஸ் கைக்கடிகாரங்களை விட ஆப்பிள் நிறுவனத்தின் கைக்கடிகாரங்களையே வாங்கியுள்ளது தெரியவந்துள்ளது.



2016 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் ஆப்பிள் 1.5 மில்லியன் கைக்கடிகாரங்களை ஏற்றுமதி செய்தது. சுவிஸ் நிறுவனமோ 5.9 மில்லியன் கைக்கடிகாரங்களை ஏற்றுமதி செய்தது.

அடுத்தக் காலாண்டுகளில் விற்பனையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஆனால் செப்டம்பர் 2017இல் ஆப்பிள் கைக்கடிகாரம் 3 வெளியானது.

புதிய போனும் கைக்கடிகாரமும் ஒரே நேரத்தில் வெளியாக, ஆப்பிள் கைக்கடிகார விற்பனை சர்வ சாதாரணமாக சுவிஸ் கைக்கடிகார விற்பனையை முந்திச் சென்றது.

ஆப்பிள் இதே நிலையில் தொடருமா என்பதை உறுதியாகக் கூறமுடியாது, காரணம் ஆப்பிள் ஒரே ஒரு தயாரிப்பைத்தான் கொண்டுள்ளது, ஆனால், சுவிஸ் நிறுவனமோ ஆயிரக்கணக்கான தயாரிப்புகளை வெளியிடுகிறது.

இருந்தாலும் ஒரு தனி நிறுவனத்தின் தயாரிப்பை ஒரு மொத்த தொழிலகத்தின் தயாரிப்புடன் ஒப்பிடும்போது இது பெரிய விஷயம்தான்.

காலம் மாறும்போது பல விடயங்கள் மாறலாம், சுவிஸ் நிறுவனம் தனது கைக்கடிகார விற்பனையிலேயே மூழ்கிக்கிடக்க ஆப்பிளோ கைக்கடிகார விற்பனையை விட்டு விட்டு அடுத்தகட்டமாக brain implants தயாரிப்பில் இறங்கலாம். அப்போது மீண்டும் சுவிஸ் கைக்கடிகாரங்களின் விற்பனை சூடுபிடிக்கத்தொடங்கலாம்.