புலம்பெயர்ந்தவர்களை அதிகம் மணக்கும் சுவிஸ் குடிமகன்கள்; புள்ளிவிவர தகவல்

சுவிஸில் புலம்பெயர்ந்தவர்களை, அங்கு பிறந்தவர்கள் அதிகம் திருமணம் செய்து கொள்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பான அறிக்கையை சுவிஸ் கூட்டரசு புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2016-ல் 15,100 கலப்பு திருமணங்கள் சுவிஸில் நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக சுவிஸ் குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் வெளிநாட்டவர்களை மணப்பது ஆண்டுக்கு 4000 என்ற அளவில் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் சுவிஸில் பிறந்தவர்களையே அந்நாட்டினர் மணப்பது கடந்த 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5000 என்ற அளவில் குறைந்துள்ளது.
இதிலும் 20லிருந்து 24 வயது வரையிலான மிக இளவயது சுவிஸ் குடிமகன்கள் கலப்பு திருமணம் செய்ய 52 சதவீதம் விரும்புவது தெரியவந்துள்ளது.
30லிருந்து 34 வயதுடையவர்களில் இந்த சதவீதம் 30-ஆக உள்ளது.
அதே போல சுவிஸில் பிறந்தவர்களையே அந்நாட்டினர் மணப்பது நிட்வேல்டன் மண்டலத்தில் தான் அதிகம் நடைபெறுகிறது.
புலம்பெயரும் வெளிநாட்டினரை சுவிஸ் குடிமகன்கள் ஜெனிவா, வவுத், பேசில் பகுதிகளில் தான் அதிகளவில் திருமணம் செய்கிறார்கள் எனவும் புள்ளிவிவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.