சுவிஸ் சந்தித்த மாறுபட்ட வெப்பநிலை; ஒயின் உற்பத்தி கடுமையாக பாதிப்பு

கடந்தாண்டு சுவிஸ் சந்தித்த மாறுபட்ட வெப்பநிலையால் ஒயின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Valais மாகாணம் உள்ளிட்ட பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலிய மொழி பெசும் பகுதிகளின் 14,750 ஹெக்டேர் நிலங்களில் திராட்சை தோட்டங்கள் அமைந்துள்ளது.
இங்கு வருடா வருடம் பெரும் அளவில் நடைபெறும் ஒயின் அறுவடை கடந்த 2017ஆம் ஆண்டு கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2017-ஆம் ஆண்டில் 79 லிட்டர் ஒயின் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, அது கடந்த 2016-ஐ விட குறைவானது என குறிப்பிட்டுள்ளது.
எனினும் திராட்சையில் இனிப்பின் சுவையால் ஒயினின் தரம் சூப்பராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏப்ரலில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவும், ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட கடும் வறட்சியும் தான் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக வேளாண் அலுவலகம் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.