சூரிச் ரயில் நிலையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு

சுவிட்சர்லாந்தின் Zurich ரயில் நிலைய பயணிகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் புதிய Concrete தடுப்புச்சுவர்களை நிறுவியுள்ளதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கண்டொனல் பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலையையும், பாதசாரிகள் நடக்கும் பாதையையும் பிரிக்கும் வண்ணம் பத்து புதிய Concrete தடுப்புச்சுவர்கள் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடர்ந்து இது போன்ற பணிகளில் பொலிசார் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் அது மக்களுக்கு தெரிவதில்லை என்று வருத்தத்துடன் கூறியுள்ளனர்.
மேலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர் மக்களின் கண் பார்வையில் உள்ளதால், இதன் பயனை நன்கு உணர்வார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.