Tamil Swiss News

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிகளவு இணையும் சுவிஸ் இளைஞர்கள்!

துப்பாக்கி சுடும் பயிற்சியில் அதிகளவு இணையும் சுவிஸ் இளைஞர்கள்!

சுவிட்சர்லாந்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி வகுப்புகளில் இணைந்து பயிற்சி பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு Jungschützen எனப்படும் இளைஞர்களுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சியில் இணைந்து 2015ம் ஆண்டு 7000 பேர் பயிற்சி பெற்றனர்.

இந்த எண்ணிக்கை 2017ம் ஆண்டு 10,079 ஆக அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை Aargauer Zeitungexternal என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.

ராணுவத்தில் இணைந்து சேவை செய்ய தாயர் செய்யும் வகையில் 15 முதல் 20 வயதுடைய இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

சுவிஸ் பெடரல் அதிகாரிகள் துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக 10,585 துப்பாக்கிகளையும், சுட்டு பயிற்சி பெற 9,30,000 குண்டுகளையும் இளைஞர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு அளித்துள்ளதாக அந்த நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளது.

இளைஞர்கள் அதிக அளவில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஆர்வமாக இணைவதால் துப்பாக்கி பயிற்சியில் இணையும் வயது வரம்பான ஆரம்பகட்ட வயதான 17 வயதில் இருந்து 15 வயதாக குறைத்து சட்ட திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

ஆனால் சில கிளப்கள் 8 முதல் 10 வயதினருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சியை அளிக்கின்றன, புதிய பயிற்சியாளர்களுக்கு சாதாரண துப்பாக்கியில் 100 மீட்டர் வரை சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பின்பு ராணுவ துப்பாக்கி மூலம் 300 மீட்டர் வரை இலக்கை குறிபார்த்து சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்தில் நாட்டின் மிகப்பெரிய துப்பாக்கி சுடும் பயிற்சி விளையாட்டு சங்கம் ஒன்று சுமார் 1,33,000 பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.

இன்று, மேற்கத்திய நாடுகளில் சுவிட்சர்லாந்து தான் அதிகபட்ச துப்பாக்கி உரிமை வைத்துள்ளவர்களை கொண்டுள்ளது, அங்கு சுமார் இரண்டு மில்லியன் மக்கள் துப்பாக்கி உரிமை வைத்துள்ளாதாக கூறப்படுகிறது.