வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை!

ஜெனிவா மண்டலத்தின் குடியிருப்பாளர்கள் அல்லாத மக்களின் குழந்தைகளுக்கு இனி பள்ளியில் சேர அனுமதியில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வாழ் மக்களின் குழந்தைகள் அதிக அளவில் ஜெனிவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் பயின்றுவருவது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்தது.
அதன்படி பெரும்பாலும் பிரான்ஸில் வசிக்கும் குடும்பத்தை சார்ந்த சுமார் 2000-க்கும் அதிகமான மாணவர்கள் ஜெனிவா மாகாண பள்ளிகளில் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு முதல் வெளிநாடுகளில் வசிக்கும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஜெனிவா பள்ளிகளில் அனுமதி வழங்கப்படாது என ஜெனிவா மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பினால் ஏற்கனவே பயின்று வரும் மாணவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.