Tamil Swiss News

சுவிஸ் கிராமத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை!

சுவிஸ் கிராமத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தின் பாறை வீழ்ச்சியில் சிக்கி மீண்டு வந்துகொண்டிருந்த கிராமத்திற்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கிரபண்டன் மாகாணத்தின் போண்டா கிராமத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் கடுமையான புயல் ஒன்று தாக்கியிருந்தது.


அப்போது பெய்த கன மழையில் 4 மில்லியன் கன அடி பாறைகள் அளவிற்கு ஊருக்குள் சரிந்து விழுந்ததில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.


கடும் நிலநடுக்கம் உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்களில் சிக்கிய 8 மலை பயணிகள் உள்ளிட்ட நபர்கள் பலியாகியுள்ள நிலையில் அவர்களின் சடலங்கள் கூட கிடைக்கவில்லை என மீட்புப் படையினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது டொரண்டியல் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், அடுத்த சில தினங்களில் மீண்டும் கடுமையான மழை இருக்க கூடும் என்பதால் கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.


மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.