Tamil Swiss News

சுவிசினுள் அகதிமனுச் செயல்முறையின் படிகள்!

சுவிசினுள் அகதிமனுச் செயல்முறையின் படிகள்!

சுவிசினுள் அகதி தஞ்சம் கோருவோர்புலம் பெயர்வுக்கான அரச அமைச்சின் பாசல், சியாசோ,  குறொட்ஸ்லிங்கன், வால்ஒர்பே பகுதிகளின் உள்நுழைவு மற்றும் செயல்நிலைகளில் அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் வேண்டும். அதன் பின்பு அகதிநிலை பெறுபவர், தற்காலிக அனுமதி பெற்றோர், அகதிநிலை மறுக்கப்பட்டவர்கள், திரும்பிச் செல்வோர்,  திருப்பி அனுப்பப்படுவோர், போன்ற பல முடிவுகளைக் கொடுக்கும் அகதி மனுச் செயல்முறை ஆரம்பமாகும்.

அகதி மனுச் செயல்முறையின் படிகள்


    உள்வருதல்

    அகதி விண்ணப்பம் சமர்ப்பித்தல்

    அகதி மனுச் செயல்முறையும் முடிவும்

    மீள்மனு வழக்கு முறைகள்

    நாட்டுக்குத் திரும்பிச் செல்லல் அல்லது அனுப்பப்படல்

    அகதிசட்ட அடிப்படையிலான வதிவிட அனுமதிகள்




அகதிமனுச் செயல் முறைகளின் போது விண்ணப்பதாரிகளுக்கு தகமைவாய்ந்த தகவல்களும் தேவைப்பட்டால் சட்ட உதவியும் தேவை.

30 சட்ட ஆலோசனை நிலைகள் இலவசமாக உதவிசெய்கின்றன.


    அகதிமனுச் செயல் முறைகளின் தகவல்களும் சாத்தியப்பாடுகளை விளக்குதலும்

    அகதிமனு தீர்ப்புகளில்ஆலோசனை

    சுய மற்றும் குடும்ப விடயங்களில் உதவியும் தகமைவாய்ந்த நிலையங்களுக்கு வழிநடத்தலும்

    அரச மற்றும் நிறுவனங்களுடனான கடின நிலைகளில் உதவி

    சட்டப்பிரதிநிதிகளாக செயற்படுதலும் சட்ட உதவிக்கு வழிநடத்தலும்


ஆலோசனைநிலைகளின் முகவரிகள் தகவல்கள்