Tamil Swiss News

உறைந்த பனிமலை மீது கயிறு இல்லாமல் ஏறிய இளைஞர்: வைரலாகும் வீடியோ

உறைந்த பனிமலை மீது கயிறு இல்லாமல் ஏறிய இளைஞர்: வைரலாகும் வீடியோ

சுவிட்சர்லாந்தின் Kandersteg மாகாணத்தில் வசித்து வருபவர் டேனி அர்னால்ட்(வயது 33), மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். வேகமாக மலை ஏறும் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள டேனி, கயிறு இல்லாமல் உறைந்த பனிமலை மீது ஏறி சாதிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார்.

அதற்காக பல கட்ட பயிற்சிகளை மேற்கொண்ட டேனி, 300 மீ உறைந்த நீர்வீழ்ச்சி மீது 1 மணி நேரம் 3 நிமிடத்தில் ஏறி உலக சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து டேனி கூறுகையில், என் வாழ்க்கை மீது எனக்கு இருக்கும் காதலை விட என் கனவுகள் மீது காதல் அதிகம், கடுமையான போராட்டத்துக்கு பின் கிடைத்த இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். மேலும், டேனியின் இந்த சாதனை வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.