Tamil Swiss News

சுவிட்சர்லாந்துக்கு லெபனான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது

சுவிட்சர்லாந்துக்கு லெபனான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது

அகதிகள் மறு குடியேற்றத்துக்கு ஆதரவு தெரிவித்துவரும் சுவிட்சர்லாந்துக்கு லெபனான் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.


புலம்பெயர்ந்தோருக்கான சுவிட்சர்லாந்தின் Secretary of State, Mario Gattiker தலைமை வகித்த குழுவுடன் லெபனான் அகதிகள் விவகாரத்துறை அமைச்சர் Mouin Merhebi பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதன்போது பேசிய அமைச்சர், சுவிட்சர்லாந்து இரண்டு வருடங்களுக்குள் சுமார் 2000 அகதிகளின் மறு குடியேற்றத்திற்காக தனது கதவுகளைத் திறந்து விட்டுள்ளது.


இதேபோன்று அடிப்படை உள் கட்டமைப்பும், சேவைகளும் இல்லாத தொலைவிலுள்ள பகுதிகளில் வாழும் சிரிய அகதிகள் மற்றும் லெபனானால் ஆதரிக்கப்படும் மக்களுக்கு உதவும் நீண்ட காலத் திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.


மேலும் அகதிகளுக்கு பிறப்பு மற்றும் திருமணம் பதிவு செய்தல் போன்ற விடயங்களில் பிரச்சனைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.


இதற்காக வருத்தம் தெரிவித்த Mario Gattiker, லெபனானில் உள்ள சூழலும் சுவிட்சர்லாந்தில் உள்ள சூழலும் வெவ்வேறு என்றும், சுவிட்சர்லாந்தில் இவ்விடயங்களுக்கு ஆவணங்கள் அவசியம் எனவும் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.