Tamil Swiss News

விமானத்தில் 50 மில்லியன் கொள்ளையடித்து சென்ற குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை

விமானத்தில் 50 மில்லியன் கொள்ளையடித்து சென்ற குற்றவாளிக்கு 8 ஆண்டுகள் சிறை

சுவிஸை உலுக்கிய பிரம்மாண்ட திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கான தண்டனை தீர்ப்பு வெளியாகியுள்ளது.


சுவிட்சர்லாந்தின் ஹெல்வெடிக் விமானத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு தொப்பி அணிந்த 8 நபர்கள் பொலிசார் போல் வேடமிட்டு 50 மில்லியன் மதிப்புள்ள வைரம் மற்றும் மாணிக்கம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.


விமான நிலைய ஓடு தளத்தில் நடைபெற்ற அந்த கொள்ளை சம்பவத்துடன் உலக அளவில் உள்ள முக்கிய கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.


அதன்பின் பொலிசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், கொள்ளைக்கூட்டத் தலைவன் மார்க் பெர்டோல்டி உள்ளிட்ட நபர்களை பிடித்து அவர்களிடம் இருந்த பல மில்லியன் மதிப்பிலான வைர கற்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


தற்போது மற்றொரு வழக்கில் சிறையிலுள்ள மார்க் கூறுகையில், நகை என்னிடம் இருந்தது உண்மை தான். ஆனால், கொள்ளை சம்பவத்தில் நான் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.


இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பில், மார்க் உள்ளிட்ட வழக்கில் சம்பந்தபட்டவர்கள் அனைவருக்கும் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.