Tamil Swiss News

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறது Nestle!

நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கிறது Nestle!

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற உணவு நிறுவனமான நெஸ்ட்லே தங்கள் நதி நீர் முழுவதையும் காலி செய்வதாக Michigan மாகாணத்திலுள்ள Osceola என்னும் நகரத்தின் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


"Ice Mountain" என்ற பெயரில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் நெஸ்ட்லே நிறுவனம், தன் தண்ணீர் தேவைகளுக்காக Osceola நகரத்தின் ஆற்றிலுள்ள தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறது.


தற்போது நிமிடத்திற்கு 250 கேலன்கள் தண்ணீரை உறிஞ்சும் அது நிமிடத்திற்கு 400 கேலன்கள் தண்ணீரை உறிஞ்ச விரும்புகிறது.


நெஸ்ட்லே நிறுவனம் 130 மில்லியன் கேலன்கள் (590 மில்லியன் லிட்டர்கள்) தண்ணீரை உறிஞ்ச Michigan மாகாணத்திற்கு வருடத்திற்கு வெறும் 200 டொலர்கள் மட்டுமே செலுத்துகிறது.

ஏழ்மையான கிராமங்களுக்குச் செல்லும் நெஸ்ட்லே, பல பொருளாதார உதவிகளைச் செய்வதாக வாக்குக் கொடுத்துவிட்டு முடிந்தவரையில் அங்குள்ள தண்ணீரை உறிஞ்சிவிட்டு அங்குள்ள நீர் நிலைகள் வறண்டதும் அங்கிருந்து இடத்தைக் காலி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


1953 முதல் இங்கு வசித்து வரும் ஆசிரியரான Maryann Borden, 2000 ஆம் வருடத்தில் நெஸ்ட்லே இப்பகுதியில் தண்ணீரை உறிஞ்சத் தொடங்கியதிலிருந்து Twin Creek நதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் காட்டும் புகைப்படங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்.


தான் சிறு பிள்ளையாக இருக்கும்போது கடுங்குளிர் கொண்ட நதியாக இருந்த அது இப்போது சுருங்கி, ஆழமாகி வெப்பமடைந்து விட்டதாகவும், அதன் காரணமாக நதியில் இருந்த மீன்கள் அழிந்துபோய் விட்டதாகவும் கூறுகிறார்.


Osceolaவின் மேனேஜரான Tim Ladd, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னிருந்ததை விட நீர்ப்படுகைகள் இப்போது கீழே போய் விட்டன. இதைக் கண்டுபிடிப்பதற்கு நீங்கள் ஒரு புவியியல் நிபுணராக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை, இங்குள்ள கால்வாய்களை பார்த்தாலே போதும் அவையே இதற்கு ஆதரங்களாக உள்ளன என்கிறார்.


ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை நெஸ்ட்லே மறுக்கிறது. நீரோடைகளிலோ, அவற்றிலுள்ள உயிரினங்களிலோ குறிப்பிடத்தக்க அளவில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கும் நெஸ்ட்லேயின் இயற்கை வள மேலாளர் Arlene Anderson-Vincent,அணைகள் வேண்டுமென்றால் நீரோடைகள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்.


ஆனால் உண்மையில் இதே நிலை நீடித்தால் வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிலுள்ள 36 சதவிகிதம் வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது என Michigan State Universityயின் கல்வியாளரான Elizabeth Mack எச்சரித்துள்ளார்.