Tamil Swiss News

Legionella நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Legionella நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சுவிட்சர்லந்தில் Legionella நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


கடந்த ஆண்டில் மட்டும் தோராயமாக 500 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.


2016 முதல் கணக்கிடும்போது இது 35 சதவிகித அதிகரிப்பு ஆகும். 2017 ஆம் ஆண்டில் 492 பேரும், 2016இல் 365 பேரும் 2015இல் 395 பேரும் 2014இல் 293 பேரும் பாதிக்கப்பட்டிருந்ததாக the Federal Office of Public Health வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.


Legionella நோய் பரவிக்கொண்டிருப்பது ஒரு விதமான அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது என்று கூறும் தொற்று நோய்கள் துறையின் தலைவரான Daniel Koch, நிலைமை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறியுள்ளார்.


Legionella நோயை உண்டாக்கும் கிருமிகள், ஷவர்கள், ஸ்பாக்கள் மற்றும் குளிர்விப்பான்கள் மூலம் பரவுகின்றன.


சுவாசிக்கும்போது நுரையீரலுக்குள் நுழையும் இக்கிருமிகள் மோசமான நுரையீரல்நோய்களை உருவாக்கும். இந்நோயால் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவிகிதத்தினர் உயிரிழக்கின்றனர்.


மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மட்டுமே பதிவு செய்யப்படுவதால், உண்மையில் இன்னும் பலருக்கு இந்நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று Daniel Koch தெரிவித்தார்.


பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்துள்ளது.


இக்குழு ஹோட்டல்கள் மற்றும் பொதுக்குளியலறைகளில் பயன்படுத்தப்படும் நீரைப் பரிசோதிக்கும்படி அதிகாரிகளை அறிவுறுத்தும்.


சுகாதாரத்துறை குளிக்கப் பயன்படுத்தும் நீரை 60 டிகிரிக்கு சூடாக்கிப் பயன்படுத்தவும் குழாய்களை தவறாமல் சுத்தம் செய்யவும் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.