Tamil Swiss News

பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் நாட்டினர் பிரெக்சிட்டிற்குப் பிறகு வாழ்க்கை மாறுமோ என்று கலக்கம்!

பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் நாட்டினர் பிரெக்சிட்டிற்குப் பிறகு வாழ்க்கை மாறுமோ என்று கலக்கம்!

சுவிட்சர்லாந்திற்கும் பிரித்தானியாவிற்கும் நெருங்கிய உறவு நீடித்தாலும், பிரித்தானியாவில் வாழும் சுவிஸ் நாட்டினர் பிரெக்சிட்டிற்குப் பிறகு தங்கள் வாழ்க்கை எப்படி மாறுமோ என்று எண்ணி கலக்கம் அடைந்துள்ளனர்.

Organisation of the Swiss Abroad (OSA) என்னும் அமைப்பைச் சேர்ந்த சிலரை பேட்டி கண்டபோது அவர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தினர்.

வடக்கு லண்டனின் Uxbridgeஇல் உள்ள Mondelez என்னும் உணவு கம்பெனியில் 7 வருடங்களாக பிராண்டு மேலாளராக பணி புரியும் Nathalie Chuard, பிரெக்சிட்டால் அவரது கம்பெனியின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம் என அஞ்சுகிறார்.

Oxford பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் ஆய்வாளராக உள்ள Vincent Croset, கல்வியாளர்கள் பொதுவாக பிரெக்சிட்டை ஆதரிக்கவில்லை என்கிறார்.

19 வருடங்களாக பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் Franz Muheim, Edinburgh பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிகிறார்.

பிரித்தானியக் குடியுரிமை இல்லாத உதவியாளர்கள், பென்ஷன் வாங்குவோர் மற்றும் இளைஞர்கள், பிரெக்சிட்டுக்குப் பின் நாட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்படலாம் என்று அவர் அஞ்சுகிறார்.

தனது அச்சம் குறித்து பிரித்தானியாவுக்கான சுவிஸ் தூதருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், Federal வெளியுறவுத்துறை விவகாரங்கள் துறையில் தகவல் துறைத் தலைவராக உள்ள Tilman Renz, பிரித்தானியாவில்வாழும் சுவிஸ் நாட்டினருக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக அதிகாரப்பூர்வமற்ற பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இரு நாடுகளுக்கிடையேயான எதிர்கால நல்லுறவு குறித்த விஷயங்கள் அதில் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

என்றாலும் இவை பிரித்தானியா, ஐரோப்பிய யூனியனை விட்டு விலகிய பிறகே முடிவு செய்யப்படும் என்பதால் அதற்கு கொஞ்சம் காலமாகும்.