மார்ச் 8 - தேசிய வாக்கெடுப்பு: நான்கு முக்கிய விவாதங்கள்

சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச் 8) நடைபெறவுள்ள வாக்கெடுப்பு குறித்த பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. மக்கள் கீழ்க்கண்ட நான்கு முக்கிய விவகாரங்களில் வாக்களிக்க உள்ளனர்:
பணப் புழக்கம் (Cash is Freedom): டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், அரசியலமைப்பில் ரொக்கப் பணத்தின் (Cash) இருப்பை கட்டாயமாக்குவது குறித்த வாக்கெடுப்பு.
ஊடகக் கட்டணம் (SBC Initiative): பொதுத்துறை ஊடகமான SBC-க்கான வருடாந்திர கட்டணத்தை 335 பிராங்கிலிருந்து 200 பிராங்காக குறைக்கக் கோரும் திட்டம்.
தனிநபர் வரி (Individual Taxation): திருமணமான தம்பதிகள் தனித்தனியாக வரி செலுத்தும் முறையைக் கொண்டு வருவது (இது தம்பதிகளுக்கு சாதகமாக அமையும் எனக் கருதப்படுகிறது).
காலநிலை நிதி (Climate Fund): சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் குறிப்பிட்ட நிதியை ஒதுக்குவது தொடர்பான முடிவு.





