Tamil Swiss News

Covid-19 பெருந்தொற்று சீரடைந்து வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை!

Covid-19 பெருந்தொற்று சீரடைந்து வருவதாக அதிகாரிகள் நம்பிக்கை!

Covid-19 பெருந்தொற்று நிலைமைகள் சீரடைந்து வருவதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Covid தொற்று உறுதியாளர் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வரும் அதேவேளை, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் முன்னேற்றம் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் வாரத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு Covid சான்றிதழ்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஜூன் 01ஆம் திகதி முதல் சுவிட்சர்லாந்தில் கொவிட் சுகாதார கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கொவிட் நிலைமைகள் ஆரோக்கியமாக காணப்படுகின்றது என மத்திய பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.


ஜூன் 02ஆம் திகதி Covid தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 756 ஆக பதிவாகியுள்ளதுடன், இன்றைய கொவிட் மரணங்கள் ஆறு ஆக பதிவாகியுள்ளது.

Covid தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவோர் வீதம் 15 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

எவ்வாறெனினும், கெடுபிடிகள் தளர்த்தப்பட்டாலும் பெருந்தொற்றிலிருந்து முற்று முழுதாக விடுபடவில்லை எனவும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் பொதுச் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.