Tamil Swiss News

சுவிஸ் நாட்டில் அவசர சிகிச்சை தேவைப்படும் தருணத்தில் செய்யவேண்டியவை (விபரங்கள்)

சுவிஸ் நாட்டில் அவசர சிகிச்சை தேவைப்படும் தருணத்தில் செய்யவேண்டியவை (விபரங்கள்)

மருத்துவ மனைகளில் அவசர சிகிச்சைக்கான பாகம் 24 மணி நேரமும் திறந்திருக்கும். இங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும். ஆகையால் அவசர சிகிச்சை தேவை ஏர்படும் வேளைகளில் முதலில் உங்கள் குடும்ப மருத்துவரிடம் தொடர்பு கொள்ளுங்கள்.

அவரோடு தொடர்பு இணைக்க முடியாத வேளையில் அவரது தொலைபேசியில் உள்ள தகவல் நிலையம் காவல் மருத்துவரின் விபரங்களை அதாவது அவரது பெயர் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றை உங்களுக்கு அறிவிக்கும்.


 முக்கிய குறிப்பு

அவசர சிகிச்சை நிலையங்களில் நோயாளிகள் அவர்களது நோயின் வலிமையை பொறுத்து அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி சிகிச்சை வழங்கப்படும். எனவே நீங்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டி இருக்கலாம். ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு, நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காமல் உங்கள் குடும்ப மருத்துவரிடமோ அல்லது காவல் மருத்துவரிடமோ செல்லுங்கள். 


காவல் மருத்துவர்

சுவிஸ் நாட்டில், இவரை பற்றிய விபரத்தை அறிவதற்காக தொடர்பு நிலையம் என்று ஒன்று இல்லை. நீங்கள் தினசரி பத்திரிகைகளில் அல்லது தொலைபேசி வாயிலான தகவல் நிலையம் 1818 என்றம் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அறியலாம்.

முதலுதவி வண்டி (அம்பிலன்ஸ்)


முதலுதவி வண்டி தேவைபடும் தருணத்தில், 144 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.

உங்கள் கவனத்துக்கு !

நோயாளிகள் இதற்க்கான கட்டணத்தின் ஒரு பகுதியை அவர்களே கட்டுதல் வேண்டும்.

அவசர தேவைக்கு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் பொழுது

    நீங்கள் யார் என்ற விபரத்தை எழிமையான முறையில் கூறுக

    நீங்கள் தற்பொழுது இருக்கும் இடத்தைக் கூறுக

    நடந்த சம்பவத்தை விளக்குக

    இதுவரை நீங்கள் செய்த செயற்பாடுகளை கூறுக


முக்கிய தொலைபேசி இணைப்புகள்

    அவசர தேவை (அவசர சிகிச்சை) 144

    காவல் நிலையம் 117

    தீ அணைக்கும் படை 118

    றெகா, சுவிஸ் வான் மீட்பு படை 1414

    தொலைபேசி வாயிலான தகவல் நிலையம் 1818